search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாற்றுத்திறனாளி பெண்"

    • போலியோவால் பாதிக்கப்பட்டு கால்கள் நடக்க முடியாமல் இருந்து வருகிறார்.
    • ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டும் வேலை நடைபெற்று வந்தது.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியில் சொந்த வீடு இல்லாமல் பல்வேறு இடங்களில் வசித்து வந்த விளிம்பு நிலை மக்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு படி பேராவூரணி சுற்றுவட்டார பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் வழிகாட்டுதல் படி வட்டாட்சியர் த.சுகுமார் அறிவுறுத்தலின்படி இது வரை 1500 பேருக்கு வீட்டு மனை ஒதுக்கீடு செய்ய ப்பட்டு வழங்கப்பட்டது.

    பேராவூரணி அருகே திருவள்ளுவர்புரம் பகுதியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட வீட்டு மனைகளில் 30 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    அப்பகுதியில் வசித்து வந்த மாற்றுத்திறனாளி தேவிகா(34) தனது தாயார் சகுந்தலா ஆதரவுடன் வசித்து வருகிறார்.

    போலி யோவால் பாதிக்கப்பட்டு கால்கள் நடக்க முடியாமல் இருந்து வருகிறார்.தனக்கு உதவி செய்திட வேண்டும் என பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் பிரபாகரிடம் மனு கொடுத்திருந்தார்.

    இதனை அறிந்த கோட்டாட்சியர் பிரபாகரன் உதவி செய்வதாக கூறி உள்ளார்.

    இது குறித்து தகவலறிந்த பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் அருள்சூசை வீடு கட்டி கொடுப்பதாக உறுதி கூறினார். ரூபாய் 8 லட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டும் வேலை நடைபெற்று வந்தது.

    நேற்று வெள்ளிக்கிழமை கோட்டாட்சியர் பிரபாகரன் புதிய இல்லத்தை திறந்து வைத்தார்.

    உடன் வட்டாட்சி யர் சுகுமார், மண்டல துணை வட்டாட்சியர் சுப்பிரமணியன், பேரூராட்சி கவுன்சிலர் சுமதி நீலகண்டன் மற்றும் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    நிறைவாக வீடு கட்டிக் கொடுத்த அருள் சூசை மற்றும் கோட்டாட்சியர் பிரபாகரன், வட்டாட்சியர் சுகுமார் ஆகியோருக்கு தேவிகா மற்றும் அவரது தாயார் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.

    • மதுரையில் மாற்றுத்திறனாளி பெண்ணை கர்ப்பிணியாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • பேஸ்புக் மூலம் இருவரும் பழக்கமானார்கள்.

    மதுரை

    மதுரை பெத்தானியாபுரத்தைச் சேர்ந்த 27 வயது மாற்றுத்திறனாளி பெண் மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    கால்களை இழந்த மாற்றுத்திறனாளியான நான் 6-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறேன். எனது பெற்றோர் மதுரை-தேனி மெயின் ரோட்டில் தையல்கடை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேஸ்புக் மூலம் மதுரை பொட்டக்குளம் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சதுரகிரி மகன் மணிகண்டன் (வயது 23) என்பவர் பழக்கமானார். இருவரும் அடிக்கடி பேஸ்புக் மூலம் பேசிக்கொண்டு வந்தோம்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று எனது பெற்றோர் கடைக்கு சென்று விட நான் மட்டும் வீட்டில் தனியாக இருந்தேன். அப்போது அங்கு வந்த மணிகண்டன் என்னிடம் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். திடீரென அவர் என்னிடம் அத்துமீற முயன்றார். ஆனால் அதற்கு நான் மறுத்தேன்.

    அப்போது திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி என்னை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்தார். இவ்வாறு பலமுறை மணிகண்டன் என்னிடம் உறவு கொண்டார். இதில் நான் கர்ப்பம் ஆனேன். இதை அறிந்த மணிகண்டன் உடனே மாத்திரை மற்றும் பப்பாளியை சாப்பிட வைத்து அந்த கர்ப்பத்தை கலைக்க செய்தார்.

    இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக மணிகண்டன் என்னுடன் பேசுவதை தவிர்த்து வந்தார். மேலும் என்னை திருமணம் செய்யவும் மறுத்துவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த நான் எனது பெற்றோரை அழைத்துக் கொண்டு பொட்டக்குளத்தில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றேன். அப்போது அவரும், அவரது தாயார் பஞ்சவர்ணம் எங்களை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்தனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த புகார் குறித்து விசாரணை நடத்த மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதன்படி மாநகர வடக்கு துணை கமிஷனர் ராஜசேகர் மேற்பார்வையில், உதவி கமிஷனர் அக்பர்கான் ஆலோசனைபேரில், மதுரை தெற்கு அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விமலா அடங்கிய தனிப்படை அமைக்கப் பட்டது. அவர்கள் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.

    தொடர்ந்து பாதிக்கப்பட்ட அந்தபெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியபோது மணிகண்டன் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் மணிகண்டனை கைது செய்தனர்.

    மதுரையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் அறக்கட்டளை மூலம் பெண்களுக்கு உதவுவது மட்டுமல்லாமல் மாணவர்களுக்கு இலவசமாக கல்வி கற்றுக்கொடுப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
    மதுரை:

    மதுரையைச் சேர்ந்தவர் அமுதசாந்தி. சிறு வயது முதல் மாற்றுத்திறனாளியான இவர் படிக்க வேண்டும் என மிகவும் ஆசைப்பட்டார். ஆனால் அவரது பெற்றோர்களால் படிக்க வைக்க முடியவில்லை. தனது உறவினர்கள் உதவியால் சாந்தி ஆசரமத்தில் படித்து கல்லூரி படிப்பை முடித்தார்.

    பின்னர், தியாகம் பெண்கள் அறக்கட்டளை மூலம் பெண்களுக்கு இலவசமாக தொழிற்பயிற்சி வழங்கினார். இதனால் ஏராளமான பெண்கள் பயனடைந்தனர். மேலும், தனது கல்வியை மற்றவர்களுக்கு அளிக்க வேண்டும் என எண்ணினார். இதையடுத்து மிகவும் எளிய குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு இலவசமாக டியூசன் அளித்தார்.

    9 ஆயிரம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். கிராமப்புறக்களில் உள்ளவர்கள் கல்வி குறித்து விழிப்புணர்வு இல்லாமல் உள்ளனர். அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவர்களுக்கு கல்வி கற்று கொடுத்து வருகின்றனர். குழந்தை திருமணம் மூலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் கல்வி அளிக்கப்பட்டு வருகிறது.

    ×